தொலைந்து போன சொகுசு கார்.. கைவிரித்த காவல்துறை.. ஜீபிஎஸ் மூலம் தானே கண்டு பிடித்த இளம் பெண்!

 

அலெக்ஸாண்ட்ரா விளாட் ருமேனியாவைச் சேர்ந்த 32 வயதானவர், தற்போது லண்டனில் வசிக்கிறார். பிப்ரவரி 6 அன்று அலெக்ஸாண்ட்ராவின் வீட்டிலிருந்து அவரது £30,000 Lexus UX சொகுசு கார் திருடப்பட்டது. இதை அறிந்த அலெக்ஸாண்ட்ரா அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.



இதையடுத்து, தனது காரை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்று நினைத்த அவர், டிராக்கிங் ஆப் மூலம் தனது காரை தானே தேட ஆரம்பித்தார். இந்நிலையில், தீவிர தேடுதலுக்குப் பிறகு, ஜிபிஎஸ் டிராக்கர் மூலம் தனது வீட்டில் இருந்து 6 மைல் தொலைவில் காரை கண்டுபிடித்தார்.

இதுகுறித்து அலெக்ஸாண்ட்ரா, காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, ​​'நீங்களே சென்று காரை எடுத்துக் கொள்ளுங்கள்' என, போலீஸ் அதிகாரிகள் அலட்சியமாக பதிலளித்ததாக அலெக்ஸாண்ட்ரா கூறினார். இந்நிலையில், தனது கார் இருந்த இடத்துக்குச் சென்ற அவர், காரை தானே கண்டுபிடித்துள்ளார்.

மேலும் அலெக்ஸாண்ட்ரா, “எனது கார் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் கூறினேன். ஆனால் நீயே போய் வாங்கிக்கொள் என்று அலட்சியமாகச் சொன்னார்கள். கொலை செய்யப்பட்ட ஒருவரின் சடலத்திலோ அல்லது காரிலோ போதைப்பொருள் இருந்தால் என்ன செய்வது? என்று நினைத்துக்கொண்டு திறந்தேன்.

நல்ல வேலை  உள்ளே எதுவும் இல்லை. காருக்குள் பொருட்கள் எதுவும் இல்லை. பெட்ரோல் மிச்சமில்லை, டேஷ்போர்டு விளக்குகள் மட்டும் எரிந்து கொண்டிருந்தன. காரில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கருவிகளையும் திருடர்கள் அகற்ற முயற்சித்துள்ளனர்.   இந்நிலையில், பெண்ணின் செயலுக்கு பாராட்டுகள் ஒரு பக்கம் குவிந்தாலும், 'காவலர்கள் வாகனத்தை கண்டுபிடிக்காததால் , எனக்கு பாதுகாப்பு இல்லை என, தெரிகிறது' என, பெண் கூறியது, சர்ச்சையை வெடித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!