ஓடும் ரயிலில் ஏற முயற்சித்து தவறி விழுந்த பெண்... உயிரைப் பணயம் வைத்து மீட்ட ரயில்வே காவலர்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசித்து வருபவர் சாமே தேவி . 50 வயதான இவர் வேலூரில் தங்கியிருந்தார். இவர் தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக நேற்று அக்டோபர் 2ம் தேதி காட்பாடி இரயில் நிலையத்துக்கு சென்றிருந்தார். அப்போது கோவையில் இருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயில் புறப்படும் நேரத்தில் தனது மகன் உதவியுடன் ஏற முயற்சித்தார். ஆனால் அவர் ஓடும் இரயிலுக்கும் - நடைமேடைக்கும் இடையில் விழுந்துவிட்டார்.
இதனை கண்ட ரயில்வே பாதுகாப்பு படை காவலர் ஆதித்யா குமார் விரைவாக செயல்பட்டு அந்தப் பெண் கீழே விழாமல் சிறிது தூரம் அந்த பெண்ணை பிடித்தபடி ஓடிச் சென்று மீட்டுள்ளார். காவலர் ஆதித்யா குமார் ரயில் பெட்டிக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி உள்ளார்.
ரயிலில் இருந்த பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்திய நிலையில் சக ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் மற்றும் பயணிகளின் உதவியுடன் காவலரை மீட்டனர். இதில் பெண் பயணி மற்றும் காவலருக்கு சிறிய காயம் ஏற்பட்டதுடன் இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!