அக்டோபர் மாத மகளிர் உரிமைத் தொகை எப்போது? அதிரடி அறிவிப்பு!!

 

தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை  செப்டம்பர் 15ம் தேதி  ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் மாதம் தோறும் ரூ1000 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற தமிழகம் முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50000  பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 60 லட்சம் பேர் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டனர்.  அவர்களின் வங்கிக் கணக்கில் செப்டம்பர் 14ம் தேதி முதலே பணம் செலுத்தப்பட்டது. 


 பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு தெரிவித்தாலும் ஒரு சிலர் தனக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என புலம்பி வந்தனர்.  இவர்களையும் இணைத்துக் கொள்ளும்வகையில் மேல்முறையீடு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் செப்டம்பர் 18ம் தேதி முதல் 30 நாட்களுக்கு இ-சேவை மையங்கள் மூலம் வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.  மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில்  புதிதாக விண்ணப்பிக்க தவறியவர்கள்  தகுதி இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமை தொகை எப்போது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.  அக்டோபர் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக வரும் நிலையில் ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 14ம் தேதியே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!