செம!! ட்ரோன் நிறுவனத்தில் புதிய முதலீடு!! கல்லா கட்டாத் தயாராகும் தோனி!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர். இவர் சென்னையை தனது இரண்டாவது வீடு என்கிறார் தோனி.கிரிக்கெட்டில் மட்டுமல்ல தோனி சமீபமாக பல முண்ணனி நிறுவனங்களில் தன்னுடைய முதலீடுகளை செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது சென்னையை சேர்ந்த ட்ரோன் ஸ்டார்ட் அப் நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் தோனி முதலீடு செய்துள்ளார்.
கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் ட்ரோன்களை தயாரித்து வருவதுடன் விவசாயத்துறைக்கு தேவையான ட்ரோன் அமைப்புகளை உருவாக்கி வருகிறது.இந்நிலையில், கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் தோனி முதலீடு செய்துள்ளதாக தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எவ்வளவு தொகை முதலீடு செய்துள்ளார் என்பதை தெரிவிக்கவில்லை. மேலும், கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராகவும் தோனி நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தோனி ஓய்வுபெறுவதாக அறிவித்த பிறகு ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடுகளை அதிகம் செய்து வருவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வரிசையில் தற்போது சென்னையை சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் தோனி முதலீடு செய்துள்ளார்.இந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் 26 நகரங்களில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் உற்பத்தி மையத்தை பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. இனி ஹெலிகாப்டருக்கு பதிலாக ட்ரோன்களே வருங்காலத்தில் அதிக பயன்பாட்டுக்கு வரும் என மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் தோனி முதலீடு செய்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக நெட்டிசன்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!