உலகக் கோப்பை டிக்கெட்டுகள் BOOK MY SHOW வில் விற்பனை!!

 

13வது ஐசிசி 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்   அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. சென்னை, மும்பை, டெல்லி, அகமதாபாத், பெங்களூரு என நாட்டின் பல்வேறு நகரங்களில் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருப்பதால்   இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதில் பல்வேறு நாடுகளின் அணிகள் பங்கேற்க உள்ளன. போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இப்போட்டி சென்னையில் நடைபெறுகிறது.

இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ‘புக் மை ஷோ’ தளத்தில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அறிவித்து இருக்கிறது.

உலகக் கோப்பை 2023 தொடரில் மொத்தம் 58 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பத்து பயிற்சி ஆட்டங்களும் அடங்கும். டிக்கெட் விற்பனை இன்று (ஆகஸ்ட் 24) துவங்கி செப்டம்பர் 15-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தொடரின் ஒவ்வொரு கட்டம் மற்றும் போட்டிகளுக்கான டிக்கெட்கள் பலக்கட்டங்களாக விற்பனை செய்யப்பட உள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை