போலாந்து இளம்பெண்ணைக் கரம் பிடித்த புதுக்கோட்டை இளைஞர்...பாரம்பரிய முறைப்படி நடைப்பெற்ற திருமணம்!

 

புதுக்கோட்டை மாவட்டம், பூசத்துறையைச் சேர்ந்தவர் பால கிருஷ்ணன். திருச்சியில் கைக்கடிகாரம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் அருண்பிரசாத். எம்.பி.ஏ படித்து முடித்து விட்டு போலந்து நாட்டில் வேலைக்காக சென்ற அருண் பிரசாத், அந்நாட்டில் வாடகை கார் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார்.

பணி நிமித்தமாக டிராவல்ஸ் ஏஜென்சிக்கு அடிக்கடி வந்து சென்ற ஹனியா என்ற இளம்பெண்ணுடன் அருண் பிரசாத்திர்கு பழக்கமும் நெருக்கமும் ஏற்பட்டுள்ளது. இவர்களது நட்பு நாளடைவில் காதலாக கனிந்தது. இதனால் இருவரும் அந்நாட்டு வழக்கப்படி அங்கேயே நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தை இந்தியாவில் நடத்த அருண்பிரசாத் பெற்றோர் விரும்பினர்.  இதற்கு ஹனியா, அவரது பெற்றோரும் ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து புதுக்கோட்டை அருகே செல்லுக்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் இந்து முறைப்படி திருமணம் நேற்று இவர்களது திருமணம் இனிதே நடந்து முடிந்தது. இதில் இருவீட்டாரின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜூலை முழுவதுமே அதிர்ஷ்டம் தான்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்