குடும்பத் தகராறில் இளம்பெண் தற்கொலை ... போலீசார் விசாரணை!
நாகர்கோவில் கீழமறவன்குடியிருப்பை சேர்ந்த செல்வசரண் (25) டெம்போ டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த ரேஷ்மா (20) என்பவரை 1.5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினைகள் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த ரேஷ்மா, தனது தாயாருக்கு போன் மூலம் தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதனால் கவலை அடைந்த அவரது தாயார், நாகர்கோவிலில் உள்ள உறவினர்களிடம் தகவல் தெரிவித்தார்.
அவர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது. அதை உடைத்து உள்ளே சென்றபோது, ரேஷ்மா தூக்கில் பிணமாக தொங்கியிருந்தார். கோட்டார் போலீசார் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 1.5 ஆண்டில் இளம்பெண் உயிரிழந்ததால், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!