undefined

தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது ...11 பைக்குகள் பறிமுதல்!

 

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்படி, சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப் மேற்பார்வையில் புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் புதுச்சத்திரம் ரயில் நிலையம் அருகே வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது பைக்கில் வந்த ஒருவர் போலீசாரை கண்டு தப்பி ஓட முயன்றதால், போலீசார் அவரை விரட்டி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர் மேல்பூவாணிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் (27) எனத் தெரியவந்தது. மேலும் அவர் புதுச்சத்திரம், குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, வடலூர், முத்தாண்டிக்குப்பம், சேத்தியாத்தோப்பு, கடலூர் முதுநகர், தூக்கணாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பல பைக் திருட்டுகளில் ஈடுபட்டது வெளிச்சமிட்டது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், அவர் திருடிய வாகனங்களை பல இடங்களில் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

அவரது தகவலின் அடிப்படையில், ஆதிநாராயணபுரம் கிராமத்தில் கோயிலின் பின்புறம் உள்ள புதரில் மறைத்து வைத்திருந்த 5 பைக்குகள் மற்றும் தீர்த்தனகிரி கிராமத்தில் குளக்கரை அருகே மறைத்து வைத்திருந்த மேலும் 6 பைக்குகள் என மொத்தம் 11 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். வேல்முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!