லாரியில் பணத்தை அள்ளி வீசிய இளைஞர்... பரபரப்பு வீடியோ!
வெனிசுலா நாட்டில் நிலவும் கடுமையான பணவீக்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய இளைஞர் ஒருவர், லாரியில் பெட்டி பெட்டியாக பணத்தை கொண்டு வந்து சாலையில் அள்ளி வீசிய சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வட அமெரிக்காவில் அமைந்துள்ள வெனிசுலா நாட்டின் அதிபராக நிக்கோலஸ் மதுரோ 2013 முதல் பதவி வகித்து வருகிறார். ஒருகாலத்தில் எண்ணெய் வளம் மிக்க நாடாக இருந்த வெனிசுலா, தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கத்தால் துவண்ட நிலையில் உள்ளது.
நம் நாட்டின் ஒரு ரூபாய், வெனிசுலாவின் 1,381 பொலிவர்ஸ்க்கு சமமான அளவிற்கு அந்த நாட்டு நாணயத்தின் மதிப்பு சரிந்துள்ளது. பணவீக்கம் முந்தைய காலங்களில் 63,000 சதவீதம் வரை உயர்ந்த நிலையில், தற்போது 225 சதவீதத்திற்குள் குறைந்தாலும், மக்களின் வாழ்க்கையில் மாற்றம் எதுவும் இல்லை. பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!