undefined

அட போங்கய்யா! திருமண நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடுறதுல தகராறு! 4 பேருக்கு அரிவாள் வெட்டு! இருவீட்டாரும் கடும் மோதல்!

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே உள்ள திருமண மண்டபத்தில் மேலக்கொந்தை கிராமத்தைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் என்பவருக்கும் கப்பியாம்புலியூரை சேர்ந்த பரணிஷா என்பவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதில் இரு தரப்பு உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். 

இந்த திருமண நிகழ்ச்சியில் டிஜே இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அதிக சத்தத்துடன் இசை ஒலிக்க இளைஞர்கள் நடனம் ஆடிக் கொண்டிருந்த போது நடனமாடுவதில் பெண் வீட்டாருக்கும், மாப்பிள்ளை வீட்டாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் மாப்பிள்ளை மைக்கேல்ராஜ் வீட்டைச் சேர்ந்தவர்கள் தடி, இரும்பு கம்பி மற்றும் கற்களைக் கொண்டு பெண் வீட்டைச் சேர்ந்தவர்களை கடுமையாக தாக்கி உள்ளனர். திடீரென அரிவாளாலும் தாக்கத் துவங்கியிருக்கின்றனர். இதில் 4 இளைஞர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து திருமணம் மண்டபத்தின் உரிமையாளர் விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோதல் சம்பவம் குறித்து விசாரித்தனர். திருமண மண்டபத்தில் நடந்த மோதல் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை