பகீர்!! ரூ1678 கோடி பண மோசடி !! ஆருத்ரா  கோல்டு நிறுவன வங்கி கணக்குகள் முடக்கம்!!! 

 

தமிழகம் முழுவதும்  பல்வேறு கிளைகளுடன் மிகக் குறுகிய காலத்தில் பெயர் பெற்ற நிறுவனம் ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம். இந்நிறுவனம்  மீது  வாடிக்கையாளர்கள்  பலர் தொடர்ந்து பணமோசடி புகார் அளித்து வந்தனர். விசாரணையில் . இந்நிறுவனத்தில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மாதம்தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி இதுவரை ரூ.1,678 கோடிவரை பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் வாடிக்கையாளர்களிடம் கூறிய படி பணத்தை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டுள்ளதால் ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் போலீசில் பணமோசடி புகார் கொடுத்தனர். அதன்படி ஆருத்ரா வழக்குகள்  விசாரணை அதிகாரியாக பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. ஜெயச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து சென்னை பெருநகர குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்டு வரும் 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனர்  பாஸ்கர், மோகன் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. ஆருத்ரா நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.3.41 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்நிறுவன வாடிக்கையாளர்களிடம் ஒரு லட்சம் பணம் கட்டினால் மாதம் ரூ.30 ஆயிரம் வட்டி தருவதாக கூறி கவர்ச்சி கரமாக விளம்பரம் செய்து ஏமாற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை