undefined

பகீர் வீடியோ...  திருமாவளவன் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இளைஞர்கள் மோதல்... போலீசார் தடியடி!

 

 தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அந்த வகையில்  சிதம்பரம்(தனி) பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.இதனையடுத்து அவர் தொகுதி முழுவதும் சென்று தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.

<a href=https://youtube.com/embed/TmeSVQtpkB0?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/TmeSVQtpkB0/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="திருமாவளவன் முன்னிலையில் தாக்கிக் கொண்ட இளைஞர்கள் | Thirumavalavan" width="853">

அதன்படி நேற்று அவர் காட்டுமன்னார் கோவில், சேத்தியாதோப்பு, புவனகிரி  பகுதிகளில் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். புவனகிரி அருகே ஜெயகொண்டான் கிராமத்தில் திருமாவளவன் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் மருதூர், நத்தமேடு, ஆலம்பாடி, குமுடமூலை கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் திருமாவளவன் பிரச்சார வண்டியை தடுத்து நிறுத்தி எங்கள் ஊருக்கு மீண்டும் வர வேண்டும் என அவரிடம்  கோரிக்கை வைத்தனர்.

அதற்கு திருமாவளவன் மீண்டும் நான் வருவேன் எனக் கூறினார். ஆனாலும் இளைஞர்களிடையே  வாக்குவாதம் முற்றி  மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். திருமாவளவன் கண்முன்னே இந்த மோதல் ஏற்பட்டது. என்ன சொல்லியும் நிறுத்தாததால் போலீசார் தடியடி நடத்தி இவர்களை கலைத்துவிட்டனர்.  போதிய போலீசார் இல்லாததே காரணம் என கட்சித்தரப்பு கூறுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதுமே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்