undefined

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மணிப்பூர் கலவரம் நாடு முழுவதும் சகஜமாகிவிடும்...  நிர்மலா சீதாராமன் கணவர் பரபரப்பு அறிக்கை!

 
 

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 ம் தேதி வரை நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக பாஜக மீண்டும் ஆட்சியமைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மிகத் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. தற்போதைய பாஜக ஆட்சியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இவர் தேர்தலில் போட்டியிடுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு கட்சித் தலைமை அறிவித்தால் போட்டியிடத் தயார் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகால பிரபாகர் பாஜகவிற்கு எதிரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் பழைய இந்தியாவை அடையாளம் காணவே முடியாது என விளாசியுள்ளார். இது குறித்து அவர்  “மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா தேர்தலையே மறந்துவிட வேண்டியதுதான். மோடியும் அவரது அமைச்சரவையும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் அரசியலமைப்பும், வரைபடமும் மாறிவிடும். மீண்டும் உங்களால் பழைய இந்தியாவை அடையாளம் காணவே முடியாது. செங்கோட்டையில் இருந்து பிரதமர் மோடி வெறுப்புணர்வை வெளிப்படுத்துவார்.

மணிப்பூர் மாநிலத்தில் குக்கி, மெய்தே   இன மோதலால் நிலவி வரும் அமைதியின்மை இந்தியா முழுவதும் பரவிவிடும்.  தேர்தல் பத்திர நிதி வழங்கல் முறை என்பது இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் அல்ல. உலகின் மிகப்பெரிய ஊழல். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடக்க இருக்கிற போட்டி தான். இதில்  பா.ஜ.க.விற்கும், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் இடையில் அமைந்தது தான் உண்மையான போட்டி” என  தெரிவித்துள்ளார். இவர் இந்திய அரசியல் பொருளாதார வல்லுநரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது. இவரது அதிரடி அறிவிப்பால் கட்சித் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்