undefined

பதக்க வேட்டையில் இந்தியா.. தங்கம் வென்று அசத்திய ஆடவர் அணியினர்..!

 

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைப்பெற்று வருகிறது. இதில் இந்திய அணி சிறப்பாக பங்கேற்று பதக்க வேட்டைகளில் ஈடுப்பட்டு வருகிறது. அந்த வகையில்  இன்று கோல்ப் போட்டி தனிப் பிரிவில் வீராங்கனை அதிதி அசோக் பங்கேற்று சிறப்பாக விளையாடி வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதனால் ஆசியப் போட்டியில் கோல்ப் தனி நபர் பிரிவில் இந்தியா வெள்ளி வென்றுள்ளது இதுவே முதல்முறையாகும்.

அதைப்போல், இன்று  50 மீ. துப்பாக்கி சுடுதல் டிராப் போட்டியில் இந்திய ஆடவர் அணி களமிறங்கியது. இதில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய பிருத்விராஜ் தொண்டைமான், ஜோரவர் சிங் சந்து மற்றும் கினான் டேரியஸ் சென்னாய் தங்கம் வென்று அசத்தினர். இது இந்தியாவின் 11வது தங்கம் ஆகும். இதுவரை இந்திய அணி 41 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!