உச்சம் தொட்ட தங்கம்!! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!!

 
gold jewel actress sneha

தங்கத்தின் விலை சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.  தங்கத்தின் விலை  இன்று மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. இன்றைய விலை நிலவரப்படி சென்னையில்   ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ28 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரு5580க்கும், சவரனுக்கு ரூ.224 உயர்ந்துஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.44,640க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.   இதனால் நகைப்பிரியர்கள், இல்லத்தரசிகள், முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ1.50 அதிகரித்து ஒரு   கிராம் வெள்ளியின் விலை  ரூ.81.50க்கும்,   ஒரு கிலோ வெள்ளி ரூ. 81,500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

gold actress

தங்கத்தின் விலை நாணய ஏற்ற இறக்கங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கம் போன்ற பிற காரணிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தங்கத்தின் மீதான சேமிப்பு இல்லத்தரசிகள், முதலீட்டாளர்களிடையே அதிகரிக்க தொடங்கியுள்ளது அவசர, அவசிய கால கட்டத்தில் தங்க நகைகள் தான் உடனடி பணமாக்க முடியும் என்பதே இதற்கு காரணம். 

தங்க நகைகளில் முதலீடு செய்வது பிற்கால வாழ்க்கைக்கு பெரிய அளவில் உதவும், பெண் பிள்ளைகளுக்கு பிற்காலத்தில் பலனாக இருக்கும் என்பதால் மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். தங்கம் குறைந்தால் மகிழ்வதும், அதிகரித்தால் கவலைப்படுவதும் நம்மவர்களின் இயல்பு. அமெரிக்க  பங்குச்சந்தையும் கடும் வீழ்ச்சியடைந்த நிலையில், இந்திய பங்கு சந்தைகளிலும் அதன் எதிரொலியாய் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. 

nayanthara gold jewels

இந்நிலையில், பலரும் பாதுகாப்பு கருதி தங்களது முதலீட்டை தங்கத்தின் பக்கம் திருப்பியிருப்பதால், இப்போதைக்கு தங்கத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் நிகழாது எனவும், தங்கத்தின் விலை பெரிய அளவில்  குறைவதற்கு வாய்ப்பில்லை என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்த விலைகளை பார்க்கும் போது  மக்களுக்கு தங்கத்தின் மீது ஒரு பயம் வருகிறது.  அதனால், மக்கள் தங்கம் வாங்குவதற்கு யோசனை செய்து வருகின்றனர்.ஆனால் முதலீட்டாளர்களை பொறுத்தவரை இது  ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது. அதே நேரத்தில் நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினருக்கு பெரும்  அதிர்ச்சியாகவே உள்ளது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை குறையுமா என எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web