வலிமை படத்தின் 2 வது பாடல் வெளியீடு!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

 
வலிமை படத்தின்  2 வது பாடல் வெளியீடு!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் தல யாக கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித் குமார். இவர் தற்போது போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் நடித்துள்ள படம் வலிமை. கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்து வருகின்றனர்.

வலிமை படத்தின்  2 வது பாடல் வெளியீடு!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவான இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள், பின்னணி இசை சேர்க்கும் பணிகள் தீவிரமாக செயல்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்தப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே வலிமை படத்தின் டீசர், முதல் பாடல் ஆகியவை வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.

வலிமை படத்தின்  2 வது பாடல் வெளியீடு!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!


இன்று மாலை வலிமை படத்தின் 2 வது பாடல் வெளியிடப்பட உள்ளது. அம்மா செண்டிமெண்ட் பாடலாக உள்ள இப்பாடல் வரிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதி சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.
இப்பாடல் இன்று வெளியிடப்பட்டதற்கு முக்கிய காரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது நடிகர் அஜித், மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தான் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

From around the web