தூய்மை பணியாளரை ஆரத்தழுவிய நடிகர் வடிவேலு! உருகிப் போன பக்தர்கள்!

 
வடிவேலு

நடிகர் வடிவேலு பண்ணாரி அம்மன் கோவிலுக்கு திடீரென வருகை தந்து சாமி தரிசனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சினிமா நடிகர் வடிவேலு திடீரென வருகை தந்தார். பின்னர் அவர் காரை விட்டு இறங்கி கோவிலுக்கு சென்று அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்து விபூதியை வாங்கி நெற்றில் பூசிக்கொண்டார். 

வடிவேலு

கோவில் நிர்வாகம் சார்பில் நடிகர் வடிவேலுக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னா் அவர் அங்கிருந்துவெளியேறி கோவிலில் உள்ள அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டார். பண்ணாரி அம்மன் கோவிலுக்கு நடிகர் வடிவேலு, வந்த தகவல் பக்தர்களுக்கு உடனடியாக தெரியவில்லை. 

சிறிது நேரம் கழித்து தான் பக்தர்களுக்கு தெரியவந்தது. உடனே அவரை பக்தர்கள் சூழ்ந்து கொண்டனர். உடனே அவருடன் பக்தர்கள் பலர் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

அப்போது நடிகர் வடிவேலு கோவிலில் வேலை செய்யும் தூய்மை பணியாளர் ஒருவரை ‘வாம்மா நீ தான் என் தங்கச்சி’ என கூறியபடி ஆரத்தழுவி தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார். கர்நாடக மாநிலம் மைசூரு பகுதியில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார்.

வடிவேலு

திம்பம் மலைப்பாதை வழியாக பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் படப்பிடிப்பிற்கு மைசூரு செல்வதாக தெரிவித்தார். நடிகர் வடிவேலு பண்ணாரி அம்மன் கோவிலுக்கு திடீரென வருகை தந்து சாமி தரிசனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.