மேலும் ஒரு டீப் பேக் வீடியோ.. நடிகை கஜோல் உடை மாற்றும் காணொளி வைரல்..!!
பாலிவுட் நடிகை கஜோல் உடை மாற்றுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால், அந்த வீடியோ டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியாக உருவாக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.
சமூக வலைதளங்களில் செல்வாக்குமிக்க ரோஸி பிரீனின் வீடியோவில் அவரது முகத்திற்கு பதிலாக கஜோலின் முகத்தை வைத்து டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாக உண்மை கண்டறியும் இணையதளங்கள் கண்டறிந்து செய்தி வெளியிட்டுள்ளன.
வீடியோ சரிபார்ப்புக் கருவியான InVIDஐப் பயன்படுத்தி வீடியோவை கீஃப்ரேம்களாகப் பிரித்து, அவற்றில் சிலவற்றை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்ததில், The Sun இணையதளம் வெளியிட்ட ஆடைகளைப் பற்றிய கட்டுரையில் இதேபோன்ற காட்சி இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அந்த கட்டுரையில் வைரலான ஒரு வீடியோவின் ஸ்கிரீன்ஷாட் இடம்பெற்றிருந்தது. அதன்படி, அப்பெண்ணை TikTok பயனர் 'rosiebreenx' என்பது தெரியவந்துள்ளது. மலிவு விலையில் கோடை ஆடைகள் பற்றி ஜூன் மாதம் 5ஆம் தேதி ரோஸி பிரீன் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ரோஸி பிரீன் வெளியிட்ட அந்த வீடியோவில் அவரது முகத்திற்கு பதிலாக கஜோலின் முகத்தை வைத்து டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியாக வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா பேக் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.