இளையராஜாவிற்கு பாடல் மூலம் வாழ்த்து சொன்ன சின்னக்குயில் சித்ரா!

 
இளையராஜாவிற்கு பாடல் மூலம் வாழ்த்து சொன்ன சின்னக்குயில் சித்ரா!


இன்று இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள் . இதனை முன்னிட்டு அவருக்கு திரையுலக பிரபலங்கள் , ரசிகர்கள், நண்பர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இசைஞானியால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடகிகளில் ஒருவரான சின்னக்குயில் சித்ரா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சித்ரா தமது ட்விட்டர் பக்கத்தில் இதை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் கொரோனா காலமாக இருப்பதால் நேரில் பார்க்க முடியவில்லை. நீங்கள் எனக்கு ஒரு குருவாக, அப்பாவாக இருந்து அறிவுரை கூறி காலம் முழுவதும் என்னை வழிநடத்தி வந்துள்ளீர்கள். இந்த தருணத்தில் கடவுள் உங்களுக்கு நல்ல தீர்க்காயுசையும், ஆரோக்கியத்தையும் அள்ளிக் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் .

இளையராஜாவிற்கு பாடல் மூலம் வாழ்த்து சொன்ன சின்னக்குயில் சித்ரா!


இன்னும் 100 வருஷம் உங்களுடைய இசைப் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என உங்களுக்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். உங்கள் இசையில் நான் பாடிய ஒரு பாடலை பிறந்தநாள் வாழ்த்து பாடலாக பாடுகிறேன் என்று கூறியுள்ளார். அத்துடன் சித்ரா, ‘வந்ததே குங்குமம்’ என்ற பாடலையும் பாடி பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

From around the web