நடிகர் விஜய் சேதுபதி மீது கிரிமினல் வழக்கு!

 
நடிகர் விஜய் சேதுபதி மீது கிரிமினல் வழக்கு!

நடிகர் விஜய் சேதுபதியை தாக்கிய மகா காந்தி, தற்போது விஜய் சேதுபதிக்கு எதிராக நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி மீது கிரிமினல் வழக்கு!

நடிகர் விஜய் சேதுபதி சில தினங்களுக்கு முன் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டார். அந்த சம்பவம் வீடியோ காட்சிகளாக சமூக வலைத்தளங்களில் வைரலானது. விஜய் சேதுபதியை தாக்கிய மகா காந்தி என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இந்நிலையில், மகா காந்தி தற்போது விஜய் சேதுபதி மற்றும் அவரது உதவியாளர் ஜான்சன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், விஜய் சேதுபதியை பாராட்டி வாழ்த்து தெரிவித்த போது ஏற்க மறுத்து இழிவுபடுத்தியதுடன் தவறாக பேசியதாகவும், எனவே அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி மீது கிரிமினல் வழக்கு!

சென்னை சைதாப்பேட்டை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web