ஆசிட் வீச்சில் இருந்து தப்பிய பிரபல நடிகை! உருக்கமான வீடியோ !

 
ஆசிட் வீச்சில் இருந்து தப்பிய பிரபல நடிகை! உருக்கமான வீடியோ !

தெலுங்கில் தனக்கென தனி இடத்தை பிடித்து முண்ணனி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை பயல் கோஷ். இவர் நடித்த “தேரோடும் வீதியிலே” தமிழ் படம் சில பிரச்சனை காரணமாக பாதியில் நின்று விட்டதால் இதுவரை தமிழ் படத்தில் நடிக்கவில்லை.
அதன்பின்னர் பாலிவுட், டோலிவுட்டில் கால்பதித்தார். இவர் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னை பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்தினார் என பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் வைரலாக்கியது.


இந்த நிலையில், நடிகை பாயல் கோஷ், சமீபத்தில் தன்னை மர்ம கும்பல் ஒன்று ஆக்ரோஷமாக தாக்கி உள்ளதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இரும்பு ராடால் தனது தலையை அடிக்க முயற்சித்ததாகவும், அதனை தடுக்க முயற்சித்தபோது தனது இடது கரத்தில் பலமான அடி விழுந்ததாகவும் தனது இன்ஸ்டாகிராமில் செய்தி வெளியிட்டுள்ளார்.


மேலும், தன்னை தாக்க வந்த நபர்களில் ஒருவரின் கையில் ஆசிட் போன்ற ஒரு பொருள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் நடிகை பாயல் கோஷ். சஎன் வாழ்வில் இதுவரை இப்படியொரு தாக்குதலை சந்தித்ததில்லை. இனியும் சந்திக்கக் கூடாது என விரும்புகிறேன் என தான் வெளியிட்ட வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார்.

ஆசிட் வீச்சில் இருந்து தப்பிய பிரபல நடிகை! உருக்கமான வீடியோ !


மர்ம நபர்கள் குறித்த அடையாளம் தனக்கு தெரியவில்லை என்றாலும், இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என கூறிய புகாரை அனுராக் காஷ்யப் மறுத்து இருந்தார். நடிகை டாப்சி உட்பட பிற நடிகைகள் பலர் அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது புதிய பரபரப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

From around the web