25 ஆண்டுகளுக்கு பின் பாபநாசம் 2 படத்தின் மூலம் கமல் – மீனா இணையும் வாய்ப்பு

 
25 ஆண்டுகளுக்கு பின் பாபநாசம் 2 படத்தின் மூலம் கமல் – மீனா இணையும் வாய்ப்பு

மலையாளத்தில் 2013-ல் மோகன்லால், மீனா நடித்து வெளியாகி வசூல் குவித்த திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு கமல்ஹாசன், கவுதமி நடித்து இருந்தனர். தெலுங்கு, இந்தி, கன்னடம், சீன மொழிகளிலும் திரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், மோகன்லால், மீனா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரிஷ்யம் 2-ம் பாகத்திற்கு நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் சீன மொழிகளிலும் ரீமேக் செய்வதாக அறிவித்து உள்ளனர்.

தமிழிலும் ‘திரிஷ்யம் 2’ படம் பாபநாசம் 2-ம் பாகமாக உருவாக உள்ளதாகவும், இதில் கமலுக்கு ஜோடியாக நடிகை மீனாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கின்றன.

கமல்ஹாசனும், மீனாவும் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ‘அவ்வை சண்முகி’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web