ஒரு இன்ச் நிலத்தைக் கூட விட்டுத்தர மாட்டேன்... நாகார்ஜூனா ஆக்ரோஷம்!

 
நாகர்ஜுனா

ஒரு இன்ச் நிலத்தைக் கூட விட்டுத்தர மாட்டேன். அத்தனைக்கும் முறையான பத்திரம், பட்டா இருக்கு. எதுவுமே ஆக்கிரமிப்பு கிடையாது. சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்று நடிகர் நாகார்ஜூனா தெரிவித்தார். ஹைதராபாத்தில் நடிகர் நாகர்ஜூனாவுக்கு சொந்தமான கட்டிடத்தை இடித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நீர்நிலைகள், அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்திருக்கும் இடங்களை அகற்ற ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. நீர்நிலைகளை சுற்றி ஆக்கிரமிப்பு செய்திருக்கும் கட்டிடங்களை செயற்கைக்கோள் மூலம் கண்டறிந்ததில் 56 குளங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

இதில் மாதப்பூர், தம்மிடிகுண்டா குளத்தை ஆக்கிரமித்து நடிகர் நாகர்ஜூனா பிரம்மாண்டமான கட்டிடம் ஒன்றைக் கட்டியிருக்கிறார். மொத்தம் உள்ள 29.24 ஏக்கரில் சுமார் 3.5 ஏக்கருக்கு சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இன்று காலை ஹைதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் சொத்து பாதுகாப்பு நிறுவனம் இந்த கட்டிடத்தின் 35 சதவீத கட்டுமானத்தை பெரிய ராட்சத இயந்திரம் வைத்து இடித்துத் தள்ளியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "என்  மண்டபத்தை சட்டவிரோதமாக இடித்தது வருத்தமளிக்கிறது. எனது நற்பெயரைக் காக்கவும்,  சட்டத்தை மீறவில்லை எனவும்  இந்த அறிக்கையில் பதிவு செய்வது சரியாக இருக்கும் என்று நினைத்தேன். அந்த நிலம் பட்டா நிலம். ஒரு அங்குல நிலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை. சட்டவிரோதமாக தனியார் நிலத்திற்குள் உள்ள கட்டிடத்தை இடிக்க நோட்டீஸ் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று தவறான தகவலின் அடிப்படையில் கட்டிடம் இடிக்கப்பட்டது.

இன்று காலை கட்டிடம் இடிக்கப்படுவதற்கு முன் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அந்த கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தால், சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற முறையில் நானே அதை இடித்திருப்பேன்.நாங்கள் தவறான கட்டுமானத்தை மேற்கொள்ளவில்லை;   ஆக்கிரமப்பில் ஈடுபடவில்லை என்று சொல்லவே இதை பதிவிடுகிறேன். அதிகாரிகளின் இந்த தவறான நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் உரிய நிவாரணம் பெறுவோம்,'' என்றார்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web