கொண்டாட்டத்தில் நக்‌ஷத்திரா! விரைவில் டும் டும் டும்…!

 
கொண்டாட்டத்தில் நக்‌ஷத்திரா! விரைவில் டும் டும் டும்…!

சின்னத்திரை பிரபலமான நக்‌ஷத்திரா திருமணத்திற்கு முன்பான சங்கீத் ஃபங்ஷனில் தனது காதலருடன் ஜோடியாக நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொண்டாட்டத்தில் நக்‌ஷத்திரா! விரைவில் டும் டும் டும்…!

தொலைக்காட்சி தொகுப்பாளினியாகும், சீரியல் நடிகையாகவும் சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நக்‌ஷத்திரா. தமிழ் சினிமாவில் சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வருகிறார். நக்‌ஷத்திரா, ராகவ் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். அவர்கள் இருவருக்கும் கடந்த ஜனவரி மாதத்திலேயே நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

கொண்டாட்டத்தில் நக்‌ஷத்திரா! விரைவில் டும் டும் டும்…!

இந்நிலையில் நக்‌ஷத்திரா மற்றும் ராகவ் ஜோடிக்கு அன்மையில் கோலாகலமாக சங்கீத் ஃபங்ஷன் நடைபெற்றுள்ளது. இந்தியாவில் பல இடங்களில் சங்கீத் ஃபங்ஷன் நடைபெற்றால் தான் அந்த திருமணமே முழுமை பெறும் என்ற வழக்கம் தொடரப்பட்டு வருகிறது. சங்கீத் ஃபங்ஷனில் மணமக்கள் உள்ளிட்ட அனைவரும் பாடலும், ஆடலுமாக கொண்டாட்டமாக இருப்பார்கள். நக்‌ஷத்திரா சங்கீத் ஃபங்ஷனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இண்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதன் கேப்ஷனில், ‘உங்கள் அனைவரது அன்பினாலும், ஆசிர்வாதத்தாலும் நாங்கள் இன்று எங்கள் திருமண கொண்டாட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கொண்டாட்டத்தில் நக்‌ஷத்திரா! விரைவில் டும் டும் டும்…!

இந்த புகைப்படங்கள் தற்போது இண்ஸ்டாவில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து நக்‌ஷத்திரா ராகவ்வுக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

From around the web