சிம்பு தனுஷுடன் நெருக்கம் காட்டும் நயன்தாரா. சர்ச்சை புகைப்படத்தின் பின்னணி என்ன?

 
சிம்பு தனுஷுடன் நெருக்கம் காட்டும்  நயன்தாரா. சர்ச்சை புகைப்படத்தின் பின்னணி என்ன?

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஒரே நேரத்தில் சிம்புவுடனும், தனுஷுடனும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் அதிகமான ரசிகர்களை கொண்ட டாப் நடிகைகள் லிஸ்டில் நயன்தாராவுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. நடிகையாக அறிமுகமான ஆரம்பம் முதலே சரத்குமார், ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா என தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். இடையில் சில சறுக்கல்களை சந்தித்த நயன்தாரா ராஜா ராணி படத்திற்கு பிறகு 2.0 அவதாரம் எடுத்து இன்று தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் போற்றப்படுகிறார்.

சிம்பு தனுஷுடன் நெருக்கம் காட்டும்  நயன்தாரா. சர்ச்சை புகைப்படத்தின் பின்னணி என்ன?

நயன்தாராவின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் சிம்புவுடனான காதல், தனுஷுடன் நெருக்கம் என பல சர்ச்சைகள் கிளம்பியது. அதைவிட்டு அவர் நீண்ட தூரம் பயணித்த பிறகும் சர்ச்சைகளும், வதந்திகளும் நயன்தாராவை நோக்கி இன்றளவும் கிளம்பிய வண்ணம் உள்ளது. தற்போது நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் உள்ளார். இந்த ஜோடி தினுசு தினுசாக புகைப்படங்களை வெளியிட்டு லவ்லி கப்பிள்ஸாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகை நயன்தாரா ஒரே நேரத்தில் சிம்புவுடனும், தனுஷுடனும் நெருக்கமாக இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்று இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. மேலும், இதனால் விக்னேஷ் சிவனின் வாழ்க்கை என்னவாகும் என கேள்விகளும் எழுந்து வருகிறது.

ஆனால், உண்மையில் இந்த புகைப்படம் நீண்ட காலங்களுக்கு முன் ஒரு பார்ட்டியில் எடுக்கப்பட்டது. அதில் தனுஷ், சிம்பு, நயன்தாரா தவிர இசையமைப்பாளர் அனிரூத்தும் உடனிருப்பார். கடந்த 2014 ஆம் வருடம் சிம்பு ஒரு பேட்டியில் இந்த புகைப்படம் குறித்து பேசிய போது, ‘நான், தனுஷ், நயன்தாரா, அனிரூத், எல்லோரும் நல்ல நண்பர்கள். எனவே, பார்ட்டியில் கலந்து கொண்டோம்’ என விளக்கமளித்துள்ளார். இந்த புகைப்படத்தை தற்போது வைரல் செய்து வரும் நெட்டீசன்கள் சம்பந்தமில்லாமல் விக்னேஷ் சிவனை கடுப்பேற்றி வருகின்றனர்.

From around the web