மாநாடு படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

 
மாநாடு படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

மாநாடு படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினருக்கு தொலைப்பேசியின் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்துள்ள மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் டைம் லூஃப் கான்செப்ட்டை மையமாக வைத்து சஸ்பென்ஸ் த்ரில்லராக வெளிவந்துள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்புவின் கம்பேக்காக அமைந்துள்ள ‘மாநாடு’ திரைப்படம் விமர்சன ரீதியிலும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் வெங்கட்பிரபுவை அழைத்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டரில் பகிர்ந்து உறுதி செய்துள்ளார்.

From around the web