ஹாலிவுட் படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் சமந்தா!

 
ஹாலிவுட் படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் சமந்தா!

தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா ஹாலிவுட் படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாக்களில் அழகிய பதுமையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. சமீபகாலங்களில் சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்து முக்கியத்துவம் பெற்று வருகிறார். கடைசியாக ‘தி பேமிலி மேன் 2’வெப் சீரியஸில் சமந்தா நடித்திருந்த கதாபாத்திரம் மிகப் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால், அதேசமயம் அந்த கதாபாத்திரம் இவருக்கு உலக அளவில் பெயரை பெற்று தந்தது.

ஹாலிவுட் படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் சமந்தா!

இந்நிலையில் சமந்தாவிற்கு தற்போது ஹாலிவுட் வாய்ப்பு கதவை தட்டியுள்ளது. பிரபல ப்ரிட்டிஷ் இயக்குனர் ஃபிலிப் ஜான் இயக்கும் திரைப்படத்தில் சமந்தா நடிக்கவுள்ளார். ‘தி அரேஞ்மெண்ட் ஆஃப் லவ்’ என்ற நாவலை தழுவி எடுக்கப்படும் இந்த படத்தில் துப்பறியும் நபராக வரும் சமந்தா பை செக்ஸுவல் பெண்ணாக துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் படத்தில் நடிக்க தேர்வானது குறித்து தனது இண்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சமந்தா, அந்த பதிவில் இயக்குனர் ஃபிலிப் ஜானுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், கடைசியாக 2009 இல் ‘இ மாய சேஷவ்’ படத்துக்காக ஆடிசனில் கலந்து கொண்டதாகவும், 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே பதற்றத்தை ஆடிசனின் போது உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

From around the web