சூர்யா படத்தின் இசையமைப்பாளர் காலமானார்

 
சூர்யா படத்தின் இசையமைப்பாளர் காலமானார்

சூர்யா நடித்த “ஸ்ரீ” படத்தின் இசையமைப்பாளர் டி.எஸ்.முரளிதரன் நேற்று (18.7.21) காலமானார். வசந்தசேனா வசந்தசேனா என்ற பாடல் மிகவும் பிரபலம்.

கோத்தம் என்கிற ஹிந்தி படம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், மனோஜ் பாரதிராஜா தயாரிப்பில் விக்ரம் – மீனா பாடிய ஒரு தனி ஆல்பத்துக்கும் இசையமைத்துள்ளார்.

இரண்டே பேர் நடித்த “வித்தையடி நானுனக்கு” என்ற படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ள அவர், ராமநாதன் கே.பி என்ற பெயரில் பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.

அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web