இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு மத்திய அமைச்சர் வாழ்த்து

 
இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு மத்திய அமைச்சர் வாழ்த்து

‘கூழாங்கல்’ படத்தை தயாரித்துள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன் மத்திய விளையாட்டு மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு மத்திய அமைச்சர் வாழ்த்து

இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 52 ஆவது ஆண்டு விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவினை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகமும் கோவா மாநில அரசும் இணைந்து நடத்தி வருகிறது. பல்வேறு மொழி திரைப்படங்கள் திரையிடப்படும் இந்த விழாவில் தமிழிலிருந்து வினோத் ராஜ் இயக்கிய ‘கூழாங்கல்’ திரைப்படமும் ஜெயசந்திர ஹாஷ்மி இயக்கிய ‘ஸ்வீட் பிரியாணி’ குறும்படமும் திரையிடப்பட்டன. இந்த படங்கள் விழாவின் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளன.

இதில் ‘கூழாங்கல்’ திரைப்படம் இந்திய அரசு சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. ‘கூழாங்கல்’ திரைப்படத்தை ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் இணைந்து தயாரித்துள்ளனர். ‘கூழாங்கல்’ திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் தொடர்ந்து விருதுகளை வென்று வரும் நிலையில் படத்தை தயாரித்த விக்னேஷ் சிவன் மத்திய விளையாட்டு மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்து வாழ்த்துகளை பெற்றுள்ளார். மத்திய அமைச்சருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அவர், அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் ‘கூழாங்கல்’ படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

From around the web