உஷார்!! ஒரே வாரத்தில் 40000 பேருக்கு மேல் பிங்க் ஐ பாதிப்பு!!

 
pink eye

இந்தியா முழுவதும் கொரோனா அலை ஓய்ந்து முடிந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறோம்,இந்நிலையில் கர்நாடகாவில் பல பகுதிகளில்  திடீரென பிங்க் ஐ கண் நோய் மக்களிடையே வேகமாக பரவி வருகிறது.ஜூலை 25  முதல்  ஆகஸ்ட் 4  வரையிலான நாட்களில் மட்டும் சுமார் 40, 477 பேர் பிங்க் ஐ கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   மாநிலத்தின் பீதர் மாவட்டத்தில் 7, 693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

pink eye


கண்களில் தொடர்ந்து வலி, கண் சிவத்தல், கண் அரிப்பு, கண்களில் இருந்து கண்ணீர் வெளியேறுதல் போன்றவை இந்நோய்க்கான அறிகுறிகளாக அறியப்படுகிறது.   இந்த  அறிகுறி உள்ளவர்கள் அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவை தொடர்ந்து   மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் பிங்க் ஐ கண் நோயால் பாதிப்புக்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.  

pinkeye


குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு அதிகம் பரவுவதாகவும் தகவல்கள் வந்துள்ளது. இந்த கண் நோயின் தாக்கத்தால் பஞ்சாப்பில் பள்ளி மாணவர்களின் வருகை 20% வரை குறைந்துள்ளதாக அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்த மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாநில  அரசு  பல்வேறு நடவடிக்கைகளை  திட்டமிட்டு வருகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web