பப்ஜி மதன் மருத்துவமனையில் அனுமதி..!!
Mon, 6 Dec 2021

சமூக வலைதளங்களில் பெண்களை குறித்து ஆபாச பதிவிட்ட பப்ஜி மதன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இவர் சமீபகாலமாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைக் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். சரியானதும் மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டார்.
ஆனால் சிறைக்கு திரும்பிய பிறகு மீண்டும் வலி அதிகமானது.
இதனால் மீண்டும் நேற்று ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறை கைதிகளுக்கென ஒதுக்கப்பட்ட வார்டில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
From around the web