தமிழகத்தில் நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள்

 
தமிழகத்தில் நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள்

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்களுக்கான நடப்பாண்டிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைபெற்றது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, வேலூர், நெல்லை, திருப்பூர், சேலம், கடலூர், காஞ்சிபுரம், கரூர், நாகர்கோவில், நாமக்கல், தஞ்சாவூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய 18 மாவட்டங்களில் நடைபெற்றது.

தமிழகத்தில் நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள்

இந்நிலையில், நீட் தேர்வு எழுதிய அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோமோ? என்ற தவறாக எண்ணத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த மாணவி கனிமொழி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட மாணவி கனிமொழி 12 ஆம் வகுப்பில் 600-க்கு 562 மதிப்பெண் பெற்றிருந்தார்.

தமிழகத்தில் நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள்

முன்னதாக, சேலம் மாவட்டம் கூழையூரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் ஏற்கனவே 2 முறை ‘நீட்’ தேர்வு எழுதி தேர்ச்சி அடையாத நிலையில், இந்த முறை ‘நீட்’ எதிர்கொள்ள அச்சப்பட்டு தேர்வு நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web