Connect with us

குற்றம்

சென்னை ஐஸ்-அவுஸ் பகுதியில் நூதனமான முறையில் வங்கி முகவரிடம் ரூ.90 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Published

on

சென்னை முகப்பேரில் வசித்து வருபவர் ஆல்வின் ஞானதுரை. இவர் தனியார் வங்கியில் முகவராக பணிபுரிந்து வந்தார். இவர் தான் வேலைபார்க்கும் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யும்படி பொதுமக்களிடம் சென்று பேசி பணத்தை வாங்கி அவர்களின் கணக்கில் செலுத்துவது வழக்கம். வங்கியின் சார்பில் இதற்கு கமிஷன் தொகை கிடைக்கும். இவ்வாறு பொதுமக்கள் 70 பேரிடம் வசூலித்த மொத்த தொகை ரூ.90,00,000 வங்கியில் செலுத்த ஏற்பாடு செய்தார்.

அப்போது சென்னை ஐயப்பன் தாங்கலில் வசித்து வருபவர் மதபோதகர் பாலன், தூத்துக்குடி தனியார் நிதி நிறுவன இடைத்தரகர் வேலாயுதம் இருவரும் ஆல்வின் ஞானதுரைக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்கள் நவாஷ் என்பவரிடம் ரூ.90 லட்சத்தையும் கொடுத்தால், அதற்கு அதிக வட்டியும், அதிக கமிஷன் தொகையும் பெற்று தருவதாக ஆசை காட்டினர்.

அவர்களை நம்பிய ஐஸ்-அவுஸ் பகுதியில் உள்ள நவாசின் அலுவலகத்திற்கு அழைத்து சென்று ரூ.90 லட்சம் பணத்தை நவாசிடம் கொடுத்துள்ளார். நவாஷ் திடீரென பணத்துடன் மாயமாகி விட்டார்.

இதற்கு பாலன், வேலாயுதம் ஆகியோரும் உடந்தை எனவும், நவாசை கண்டுபிடித்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என ஆல்வின்ஞானதுரைபோலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தீவிர தேடுதல் வேட்டையில் பாலன், வேலாயுதம் , ஹசன்காதர் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.12.40 லட்சம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மீதிப் பணத்துடன் தப்பி ஓடிய நவாசை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.

செய்திகள்3 hours ago

திடீரென தீப்பற்றி எரிந்த கார்! தலைமை செயலகத்தில் பரபரப்பு!

இந்தியா4 hours ago

காஷ்மீர் கலாச்சாரத்தில் வன்முறை இருந்ததில்லை – காஷ்மீர் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர்

செய்திகள்5 hours ago

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.43 அடியாக உயர்ந்தது

அரசியல்6 hours ago

அதிமுக விற்க டெல்லி வீதிகளில் அலைந்து திரியும் ஓபிஎஸ் – இபிஎஸ் !

இந்தியா6 hours ago

தஜிகிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு

ஆன்மிகம்6 hours ago

கோவில்களில் உழவாரப் பணிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்!

இந்தியா7 hours ago

இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் இந்தியன் பனோரமா

செய்திகள்7 hours ago

இந்தியா-இலங்கை 20 ஓவர் தொடர்: குருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா காரணமாக இன்றைய போட்டி ரத்து.

இந்தியா7 hours ago

மாணவிகளிடையே அறிவியல் பிரிவை பிரபலப்படுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

அரசியல்8 hours ago

இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை!

அரசியல்2 months ago

இன்று விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 /-!!

அரசியல்4 months ago

அதிர்ச்சி! சகாயம் ஐ.ஏ.எஸ். தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

அரசியல்3 months ago

2 நாட்கள் முழு ஊரடங்கு! மாநில அரசு அதிரடி!

அரசியல்3 months ago

இந்தியாவில் 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு!

அரசியல்2 months ago

எச்சரிக்கை.! தவறு செய்யும் அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்!

அரசியல்2 months ago

நாளை முதல் தமிழகத்தில் இ-பதிவு !எப்படி விண்ணப்பிப்பது! ?

அரசியல்4 months ago

சினிமா பிரபலங்களின் வாக்கு பதிவு புகைப்படங்கள்

அரசியல்3 months ago

தமிழகத்தில் இரவு ஊரடங்கா? தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை!

செய்திகள்4 months ago

தமிழ் புத்தாண்டுக்கு இந்தியா முழுவதும் பொது விடுமுறை!

செய்திகள்2 months ago

தளர்வுகளில் பஸ், ரயில்கள் இயக்கப்படுமா?அதிகாரிகள் விளக்கம்!

Trending