குவியும் பாராட்டுக்கள்! ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய கல்பாக்கம் அணுமின் நிலையம்!

 
குவியும் பாராட்டுக்கள்! ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய கல்பாக்கம் அணுமின் நிலையம்!


சென்னையில் உள்ள செங்கல்பட்டு கல்பாக்கத்தில் மத்திய அரசின் நிறுவனமான சென்னை அணு மின்நிலையம் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணியில் உள்ளது. இங்கு மின்உற்பத்தி தவிர தனது கூட்டாண்மை சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், வெங்கம்பாக்கம், மாமல்லபுரம், லட்டூர், உட்பட பல்வேறு கிராம மக்களுக்குத் தேவையான குடிநீர், சாலைவசதி, மாணவர்கள் நலன்கருதி பள்ளிக்கூடங்களில் ஆய்வக கட்டிடங்கள், மீனவர்களுக்கு செயற்கைப் பவளப்பாறைகள் அமைத்தல், தொழிற்பயிற்சிகள் போன்ற சமூகப் பணியிலும் தம்மை ஈடுபடுத்தி வருகிறது.

குவியும் பாராட்டுக்கள்! ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய கல்பாக்கம் அணுமின் நிலையம்!

இந்நிலையில் தற்போது கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம், கூவத்தூர், நெரும்பூர் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், திருக்கழுக்குன்றம் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் கொரோனாவல் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்க சென்னை அணுமின்நிலையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று செய்திருந்தது.
இதற்கான செலவுத்தொகை சுமார் ரூ.1.24 கோடி. இந்த தொகை முழுவதும் அணுமின்நிலைய இயக்குநர் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்தார்.

From around the web