முதல்வரின் கனவு திட்டமான சிங்கார சென்னை 2.0 விரைவில் தொடக்கம்!

 
முதல்வரின் கனவு திட்டமான சிங்கார சென்னை 2.0 விரைவில் தொடக்கம்!


தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்றது முதல் மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் முதல்வர் 25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகர மேயராக பொறுப்பு வகித்தவர்.
அப்போது சென்னை மாநகரை அழகுபடுத்த ஜவகர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ‘சிங்கார சென்னை’ திட்டத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் தமிழகத்தின் முதல்வரானவுடன் தனது கனவு திட்டமான சிங்கார சென்னை திட்டத்தை ‘சிங்கார சென்னை 2.0’ வாக புதுப்பொலிவுடன் செயல்படுத்த உள்ளார். சென்னையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக சென்னை மாநகரில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

முதல்வரின் கனவு திட்டமான சிங்கார சென்னை 2.0 விரைவில் தொடக்கம்!


இதுகுறித்து சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி விடுத்த செய்திக்குறிப்பில் இதுகுறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் சிங்கார சென்னை திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக தேவைப்படும் செலவினங்கள் பற்றியும், நிதி ஆதாரங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன.


மேலும் அதில் கலை, கலாச்சாரத்தை மேம்படுத்தும் வகையில் கல்வி, விளையாட்டு, சுகாதாரத்தை பேணும் வகையில் மற்ற முக்கிய அம்சங்கள் , மற்றும் ‘பிராஜக்ட் புளூ’ என்ற பெயரில் சென்னையில் கடற்கரை பகுதிகளை அழகுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர நீருக்கு அடியில் மீன் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.

முதல்வரின் கனவு திட்டமான சிங்கார சென்னை 2.0 விரைவில் தொடக்கம்!


அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். ‘பயோராக் டெக்னாலஜி’ முறையில் இந்த கடற்கரை பகுதிகள் வித்தியாசமான முறையில் மேம்படுத்தப்படும். சிங்கார சென்னை சீரமைப்பு திட்டத்தின் கீழ் அண்ணாநகர் டவர் பூங்காவும் புதுப்பொலிவு பெறும் . சென்னையில் தேவைப்படும் இடங்களில் கூடுதலாக மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர அறிவியல், என்ஜினீயரிங் மற்றும் கணித பூங்காக்களும், செல்லப் பிராணிகளுக்கான பூங்காவும் உருவாக்கப்படும். அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும்‘ஸ்மார்ட் வசதிகள்’ மேற்கொள்ளப்படும். சிங்கார சென்னை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடமும் விரைவில் கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web