தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கப் போகும் மாவட்டங்கள்!

 
தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கப் போகும் மாவட்டங்கள்!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி பரவலாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை கோயம்புத்தூா், தேனி, நீலகிரி, சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள திண்டுக்கல், தென்காசி, மற்றும் ஈரோடு, திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

ஜூலை 21ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். மீதமுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம். தெற்கு வங்கக் கடல் பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்தக்காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 22ம் தேதி வரை செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web