ரயில் மோதி உயிரிழந்த யானையின் வயிற்றில் 4 மாத கரு..!!

 
ரயில் மோதி உயிரிழந்த யானையின் வயிற்றில் 4 மாத கரு..!!

கேரளா தமிழ்நாட்டு எல்லையில் கோவை, பாலக்காடு இடையேயான ரயில்வே தண்டவாளத்தின் ஏ பிரிவு உள்ளது. நேற்றிரவு 9 மணியளவில் மங்களூர் – சென்னை அதிவேக ரயில் மோதி தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 யானைகள் இறந்துபோயின.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் யானையின் உடல்களை அப்புறப்படுத்தி உடற்கூராய்வு மேற்கொண்டனர். அதன்படி உயிரிழந்த யானைகளில் 2 பெண் யானை என்பதும், மற்றொன்று தந்தம் இல்லாத 12 வயது மக்னா வகை ஆண் யானை என்பது தெரியவந்தது.

மேலும் இறந்துபோன பெண் யானைகளில் ஒன்று கர்ப்பமாக இருப்பது உடற்கூராய்வில் தெரியவந்தது. அந்த யானையின் வயிற்றில் 4 மாத கரு இருந்துள்ளது. இறந்த பெண் யானையின் வயிற்றில் இருந்த கருவை நீக்கிய போது, வனத்துறையினர் கண்ணீர் வடித்தது காண்போரை துயரில் ஆழ்த்தியது.

From around the web