தடைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை! அதிரடி அறிவிப்பு!

தடைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை! அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. இருந்த போதிலும் தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாட அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் படி குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

தடைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை! அதிரடி அறிவிப்பு!

சுற்றுசூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால் மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தது.இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பது முழுமையாக தடைசெய்யப்படவில்லை.

தடைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை! அதிரடி அறிவிப்பு!

உச்சநீதிமன்ற உத்தரவின் படி, ஆண்டிமணி, லித்தியம், மெர்குரி, ஆர்செனிக், காரீயம் மற்றும் பேரியம் உப்புகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது.
பசுமை பட்டாசுகள் மற்றும் பி.இ.எஸ்.ஓ., வால் அங்கீகரிக்கப்பட்ட வெடிமருந்துகள் அடங்கிய பட்டாசுகள் மாத்திரமே விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

தடைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை! அதிரடி அறிவிப்பு!

மருத்துவமனைகள், நர்சிங் ஹோம், கல்வி நிலையங்கள், கோயில்கள் அமைந்துள்ள பகுதிகளில் 100 மீட்டருக்குள் பட்டாசு வெடிக்கக் கூடாது. இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.
பட்டாசு விற்பனை செய்யும் கடைகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

From around the web