மத்திய அரசு வேலை! அஞ்சல் துறையில் அசத்தலான வேலை வாய்ப்பு!

 
மத்திய அரசு வேலை! அஞ்சல் துறையில் அசத்தலான வேலை வாய்ப்பு!

இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் துறைகளில் மிகவும் முக்கியமானது அஞ்சல் துறை. இந்த துறையை மேம்படுத்தவும், மக்களிடையே கொண்டு சேர்க்கவும் அவ்வப்போது பல புதிய திட்டங்களை அஞ்சல்துறை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தபால் ஆயுள் காப்பீடு, ஊரக தபால் ஆயுள் காப்பீடுகளுக்கு நேரடி முகவர்களை நியமிக்கும் பொருட்டு ஜூலை 9ம் தேதி நேர்முகத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

மத்திய அரசு வேலை! அஞ்சல் துறையில் அசத்தலான வேலை வாய்ப்பு!

இது குறித்து தபால் அலுவலக மூத்த கண்காணிப்பாளர் டி.வி.சுந்தரி விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “தபால் ஆயுள் காப்பீடு, ஊரக தபால் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணிகளுக்கு விருப்பம் உள்ளவர்கள், தாம்பரம் தபால் அலுவலங்களின் மூத்த கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 9ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.


முகவர் பணிகளுக்கான நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்கள் மத்திய,மாநில அரசுகள் நடத்திய பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேதியன்று, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 50 ஆகவும் இருக்க வேண்டும்.

மத்திய அரசு வேலை! அஞ்சல் துறையில் அசத்தலான வேலை வாய்ப்பு!


வேலை இல்லாத, சொந்த தொழில் செய்யும் படித்த இளைஞர்கள், காப்பீடு நிறுவனத்தின் முன்னாள் ஆயுள் காப்பீடு ஆலோசகர்கள், முகவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சங்க ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், சுயஉதவிக் குழுவினர், கிராமத் தலைவர்கள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விருப்பம் உள்ளவர்கள் தங்கள் அசல் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.