இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் அடிப்படையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு நேற்றே விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

இன்று மீண்டும் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

திருவண்ணாமலை, தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, சேலம், கரூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web