ஸ்பாவில் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 40 பேர்..!!

 
ஸ்பாவில் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 40 பேர்..!!

சென்னையில் சட்டவிரோதமாக இயங்கும் ஸ்பாக்களை கண்டறிந்து, அவற்றில் அதிரடியாக ரெய்டு நடத்தினர். இதன்மூலம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டவர்களை போலீசார் மீட்டனர். மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக பல்வேறு ஸ்பா உரிமையாளர்கள் மீது வழகுப்பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து புதுச்சேரியிலுள்ள 150 ஸ்பாக்களில் அங்குள்ள போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 17 வயது பெண்ணை காவல்துறையினர் மீட்டனர். அவரிடம் விசாரித்த போது, அவர் கூறிய உண்மைகள் போலீசாரை அதிர்ச்சி அடையச் செய்தன.

ஸ்பாவில் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 40 பேர்..!!

அதன்படி, பெண் பணியாற்றி வந்த ஸ்பா உரிமையாளர் அவரை வலுக்கட்டாயமாக பாலியல் தொழில் செய்ய வைத்துள்ளார். இதன்மூலம் 40 பேர் வரை அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பி. ஸ்ரீராம் (30), விழுப்புரத்தைச் சேர்ந்த எம். சாதிக் பாட்ஷா (47) ஆகியோரை போலீசர் கைது செய்தனர்.

ஸ்பாவில் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 40 பேர்..!!

பெண் கூறிய தகவலின் அடிப்படையில் மேலும் 8 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இதுதவிர மேலும் 30 பேர் குறித்து தகவல்களை தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில் ஸ்பா உரிமையாளர் சுனிதாவை (56) புதுச்சேரி காவல்துறை கைது செய்துள்ளது.

From around the web