குட் நியூஸ்!! இனி தனியார் பள்ளிகளில் இது கட்டாயம்!! இயக்குனர் உத்தரவு!

 
குட் நியூஸ்!! இனி தனியார் பள்ளிகளில் இது கட்டாயம்!! இயக்குனர் உத்தரவு!

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல், சபல புத்தியுள்ள ஆண்களாக பார்த்து திருந்தினால் தான் மீ டூ என்று அங்கங்கே கேட்கிற குரல்கள் குறைந்து, இல்லாமலேயே போகும் போல. சினிமா துறையில் சபல புத்தியுள்ள பிரபலங்களின் முகத்திரை கவி நயத்துடன் கிழித்தெறிந்த மீ டூ புகார்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளையும் விட்டு வைக்கவில்லை.

குட் நியூஸ்!! இனி தனியார் பள்ளிகளில் இது கட்டாயம்!! இயக்குனர் உத்தரவு!

ஒரு கட்டத்தில் நகரின் பிரபலமான பள்ளிகள் என்று பீற்றிக் கொள்கிற பத்மஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் குறித்த செய்தி எல்லாம், அந்த பள்ளியில் பயின்ற மாணவிகளின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியது. போதாதற்கு இவருக்கு வக்காலத்து வாங்கிய மதுவந்தி எல்லாம் இன்னொரு வனிதா விஜயகுமார் தான்.

குட் நியூஸ்!! இனி தனியார் பள்ளிகளில் இது கட்டாயம்!! இயக்குனர் உத்தரவு!

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள மெட்ரிக்குலோஷன் பள்ளிகளில் மாணவிகளின் மீதான பாலியல் புகார்களைத் தெரிவிக்க புகார் பெட்டிகள் வைக்க வேண்டும், தனியாக குழு அமைக்க வேண்டும் என்று தமிழக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

குட் நியூஸ்!! இனி தனியார் பள்ளிகளில் இது கட்டாயம்!! இயக்குனர் உத்தரவு!

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், உயர்நீதி மன்றம் தெரிவித்து இருந்த அறிவுரைகளின் படி, மாணவியர் மீதான பாலியல் துன்புறுத்தில் தொடர்பாக புகார்கள் அளிக்க குழு அமைக்க வேண்டும் என்றும், புகார் பெட்டிகள் வைக்க வேண்டும் என்றும், பள்ளிகள் இயங்கும் வரம்புக்குட்பட்ட மகளிர் காவல் நிலையத்தின் தொலைபேசி எண்களையும் எழுதி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர் ஆசிரியராகவோ, பணியாளரோ, நிர்வாகத்தினரோ என யாராக இருந்தாலும், புகார் தர மாணவிகள் தயங்காத வகையில் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் அறிவுரை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இனி மேலாவது மாணவிகளின் எதிர்காலம் சிறக்கட்டும்.

From around the web