சென்னையில் பயங்கரம்! போக்குவரத்து தொடங்கிய முதல் நாளிலேயே விபத்து!

 
சென்னையில் பயங்கரம்! போக்குவரத்து தொடங்கிய முதல் நாளிலேயே விபத்து!

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஜூன் 28 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களான சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்று காலை முதல் பூந்தமல்லி பணிமனையில் இருந்து குறைந்த அளவிலான மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. திருநின்றவூரில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு பூந்தமல்லி நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.

பூந்தமல்லி நீதிமன்றம் எதிரே வந்தபோது திடீரென மாநகர பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னால் சென்ற வேன் மற்றும் கார் மீது மோதியது. அத்துடன், சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரிலும் மோதியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் பேருந்தூ ஓட்டுனர் கேசவன் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அரசு பேருந்துமோதியதில் வேன், கார் சேதம் அடைந்தது. அதிர்ஷ்ட வசமாக அதில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

பொது போக்குவரத்து தொடங்கிய முதல் நாளே மாநகரபேருந்து விபத்தில் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊரடங்கின்போது பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்துகளை முறையாக பராமரிக்காமல் இயக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

From around the web