இன்று பள்ளிகளுக்கு விடுமுறை !அதிரடி அறிவிப்பு!
Mon, 18 Oct 2021

தமிழகத்தில் புதிதாக உருவாகியுள்ள இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் காரணமாக பலத்த மழை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெய்து வருகிறது. அந்த வகையில் நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

இது குறித்து குமரி மாவட்ட கலெக்டர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளத்தில் மிதக்கின்றன. மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் இன்று ஒரு நாள் திங்கட்கிழமை மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
From around the web