குட் நியூஸ்! கரூர் மாவட்டத்தில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தீவிரம்!

 
குட் நியூஸ்! கரூர் மாவட்டத்தில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தீவிரம்!


தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12 முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதனையடுத்து கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டத்தில் வாய்க்கால் பகுதிகளில் தூர்வாரும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இது குறித்து விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பில் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை வரை செல்வதற்காக கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப் பாதுகாப்புக்கோட்டத்தில் உள்ள நீர்வழித்தடங்கள் மற்றும் வடிகால் வாரிகளை தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

குட் நியூஸ்! கரூர் மாவட்டத்தில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தீவிரம்!


இதன் மூலம் பாசன வாய்க்காலில் திறக்கப்படும் நீரை கடைமடை வரை தங்கு தடை இன்றி செல்ல முடியும். மேலும் 5 கிராமங்களை சேர்ந்த 9,704 ஏக்கர் பாசன நிலங்கள் முழுவதும் பாசன வசதி பெறும் . வடிகால் வாரிகளில் செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர்கள் நீக்கப்பட்டால் வெள்ள நீர் தேங்காமல் எளிதாக வடிந்து அருகில் உள்ள பாசன நிலங்களில் பயிர் சேதம் ஏற்படமால் பாதுகாக்கப்படும்.

இதன் மூலம் 12 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வெள்ளநீர் பாதிப்பில் இருந்து பாதுகாக்கப்படும்.தற்போது தூர்வாரும் பணிகள் 30 சதவீதம் முடிக்கப்பட்டுள்ள நிலையில் வடிகால் வாரிகள் தூர்வாரும் பணியினை பருவ மழைக்கு முன்பு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

From around the web