தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இந்த 10 மாவட்டங்களில் மழை!

 
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இந்த 10 மாவட்டங்களில் மழை!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்பதால், தமிழ்நாடு கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு சுமார் 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், 25ம் தேதி வரை தெற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு சுமார் 40-50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்றும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

From around the web