#BREAKING: இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!! சற்று முன் கலெக்டர் அறிவிப்பு!!
Sat, 4 Dec 2021

மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தற்போது உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த விடுமுறை, கனமழை முன்னெச்சரிக்கைக்காக என்றும், மாணவர்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
From around the web