தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்!

 
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்!


இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தற்போது தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த செய்திக்குறிப்பில் “தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களான திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம். இது தவிர தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்!

நகரின் ஒரு சில இடங்களிலும், திருவள்ளூர் மாவட்டத்திலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜூன் 16, 17 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா, தெற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளிலும், அரபிக்கடல் பகுதிகளிலும் 17ம் தேதி வரை பலத்த காற்று வீசக்கூடும். இதனால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

From around the web