அக். 27 மற்றும் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!

 
அக். 27 மற்றும் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!


தமிழகத்தில் மருதுபாண்டியர் தினம் அக்டோபர் 27 ம் தேதி நாளை அனுசரிக்கப்பட உள்ளது. அதே போல் அக்.30 தேதி தேவர் ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது.


தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் நடைபெறும் முக்கிய விழாக்கள் , நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்.

அக். 27 மற்றும் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!

அன்றைய தினத்தில் கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதற்கு ஈடு செய்யும் விதமாக மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது .
இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “அக்டோபர் 27ம் தேதி காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர் ஒன்றியத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அக். 27 மற்றும் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!


அதேபோல், அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை, திருப்புவனம், காளையார்கோவில், மானாமதுரை, இளையான்குடி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது”.

From around the web