தூத்துக்குடி மதுப்பிரியர்கள் ஒரே நாளில் 4.5 கோடிக்கு மது விற்பனை

 
தூத்துக்குடி மதுப்பிரியர்கள் ஒரே நாளில் 4.5 கோடிக்கு மது விற்பனை

தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாதிப்பு அதிகமுள்ள கோவை, திருப்பூர் உட்பட 11 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில் நேற்று முதல் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

மே 10 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் 35 நாட்களை கடந்து ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மதுப்பிரியர்கள் ஒரே நாளில் 4.5 கோடிக்கு மது விற்பனை

இந்நிலையில் மதுபிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் சமீபத்தில் அரசு அறிவித்த தளர்வில் மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டதும் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 35 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் உற்சாகத்தில் ஆரவாரத்துடன் கடைகளுக்கு வந்தனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. அனைத்து மதுபாட்டில்களும் மளமளவென விற்று தீர்ந்தன.

நேற்று முன்தினம் ஒரே நாளில் மொத்தம் ரூ.4.5 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது, இதில் 1,700 பெட்டி பீர் வகைகளும், 6 ஆயிரம் பெட்டி இதர மது பானங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது வழக்கமான விற்பனைதான் என்றும், அனைத்து மதுபானங்களும் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

From around the web